iPhone-னிலிருந்து Firefox OS சாதனத்திற்க்கு மாறிய பின்னர் iPhone பயனர்களிடமிருந்து உங்களால் உரை செய்திகளை பெறமுடியவில்லையா? இரு iPhone பயனர்களுக்குள் உரை செய்திகள் சாதாரனமாக பறிமாற்றப்படுவதில்லை; மாறாக, அவை Apple சேவையகனால் iMessage எனும் முறைக்கு மாற்றபட்டு அனுப்பப்படுகின்றன.
சிம் அட்டையினை Firefox OS சாதனத்திற்க்கு மாற்றுவதற்க்கு முன் உங்கள் iPhone-னிலிருந்து iMessages விருப்பத்தினை முடக்கிவிட வேண்டும். அதற்கான வழிமுறைகள் பின்வருமாறு:
- உங்கள் iPhone-லிருந்து Settings -ஐ திறக்கவும்.
- பட்டியலை கீழ்நோக்கி உருட்டி Messages-ஐ திறக்கவும்.
- திரையின் மேலுள்ள iMessages-ல் Off என அமைக்கவும்.
- அவ்வளவுதான்! இப்பொழுது உங்கள் iPhone-லிருந்து சிம் அட்டையை நீக்கி Firefox OS சாதனத்திலிடலாம்.