நினைவில்கொள்க: உங்கள் சாதனத்தில் சிம் அட்டை பொருத்தப்பட்டிருந்தால் தேதியும், நேரமும் தானாக அமைக்கப்பட்டுவிடும். தேவையேற்ப்பட்டாலொழிய இவற்றை மாற்றவேண்டாம். சிம் அட்டையால் அமைக்கப்பட்டுள்ள நேரம் தவறானதெனில் உங்கள் சேவை அதிகாரியை தொடர்புகொள்ளவும். சிம் அட்டையினை சாதனத்தினுள் உள்நுழைத்தும் காணப்படவில்லை அல்லது சிம் அட்டை செயல்பாடுகள் சரியாக இயங்கவில்லையெனில், சாதனம் வாங்கப்பட்ட இடத்தை தொடர்புகொள்ளவும்.
சாதனத்தின் தேதி மற்றும் நேரத்தினை கண்டிப்பாக மாற்றியாக வேண்டுமெனில், பின்வரும் வழிமுறைகளை கையாளலாம்:
- அமைவுகள் பயன்பாட்டினை திறக்கவும் .
- "தனிப்பயனக்கம்" அமைவுக்கு பட்டியலை உருட்டி, அமைவின் மீது தட்டவும்.
- தானாக அமை செயலில் இருந்தால் அதை செயல் நிறுத்தவும்.
- "தேதி" -க்கு அடுத்துள்ள பிரிவில் சொடுக்கி மாதம், நாள் மற்றும் வருடம் ஆகியனவற்றை தேர்வுசெய்யவும்.
- சொடுக்கி தேதி மாற்றத்தினை சேமிக்கவும்.
- நேரத்தை அமைக்க "நேரம்" பிரிவில் சொடுக்கி புதிய நேரத்தினை தேர்வுசெய்யவும்.
- சொடுக்கி நேர மாற்றத்தினை சேமிக்கவும்.